காலை பறித்து தள்ளுவண்டில் தருகின்ற இலங்கை இராணுவம்!
இறுதி யுத்தத்தை அரங்கேற்றிய முல்லைத்தீவு மண்ணில் தம்மால் கால்கள் பறிக்கப்பட்டவர்களிற்கு பொஸன் கொண்டாட்டத்தில் செயற்கை கால்கள்,தள்ளுவண்டில்கள் வழங்கியுள்ளது இலங்கை இன அழிப்பு இராணுவத்தின் பாதுகாப்பு படைத் தலைமையகம் .
பௌத்த பொஸான் போயா தினத்தில் போதி ராஜா பவுண்டேசன் எனும் அமைப்பினை சேர்ந்த ஓமல்பே சோபித நாயக்க தேரரும் நிகழ்வில் பங்கெடுத்திருந்தார்.
இராணுவப் படைகளின் தளபதியான மேஜர் ஜெனரல் துஸ்யந்த ராஜகுருவின் வேண்டுகோளுக்கு இணங்க உதவிகள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே கலந்து கொண்டதாகவும் தெரியவருகின்றது.
யாரது கால்களை இனஅழிப்பு இராணுவம் பறித்துக்கொண்டதோ அதே அப்பாவி மக்களிற்கு செயற்கை கால்களை வழங்கி படம் பிடிப்பது தற்போதைய அரசியலாகியுள்ளது.
Post a Comment