ஹர்த்தலுக்கு ஆதரவு வழங்க யாழ் வர்த்தகர்கள் மறுப்பு
மாணவி றெஜினா படுகொலையை கண்டித்து இன்று வடமாகாணம் தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும் யாழ் நகரம் உள்ளிட்ட பிரதேச வர்த்தகர்கள் ஹர்த்தாலுக்கு ஒத்துளைப்பு வழங்க மறுத்த நிலையில் இன்று பூரண ஹர்த்தால் அனுட்டிக்கப்படவில்லை.
சுழிபுரத்தில் பாடசாலை மாணவி றெஜினா துஸ்பிரயோகம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும் நீதி கோரியும் மாணவர்களும் பொது மக்களும் தொடர் கவனயீர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாகவே வடக்கு மாகாணம் முழுவதாமாக இன்றைய தினம் ஹர்த்தாலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனாலும் பாடசாலைகள், பேருந்துகள், கடைகள் என்பன ஒரு சில இடங்களில் இயங்காவிட்டாலும் ஏனைய இடங்களில் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
இவ்வாறு கர்த்தால் முழுமையாக நடைபெறாது சில இடங்களில் சிலர் மட்டுமே கடைகளப் பூட்டியும் பஸ்கள் ஓடாமலும், பாடசாலைகள் இயங்காமலும் இருக்கின்றதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
இதேவேளை நேற்றைய தினம் அழைப்பு விடுக்கப்பட்ட இக் ஹர்த்தாலுக்கு பல தரப்பினர்களும் ஆதரவைத் தெரிவிக்காத நிலையிலையே இன்றைய கர்த்தால் பூரணமாக நடைபெறவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment