Header Ads

test

மானிப்பாயில் ரவுடிகள் அட்டகாசம் - வீடு புகுந்து வாள்வெட்டு

மானிப்பாய் சம்மந்தப் பிள்ளையார் கோவிலுக்கு அண்மையாக உள்ள வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல், முச்சக்கர வண்டி மற்றும் வீட்டு கண்ணாடி யன்னல்களை அடித்து சேதப்படுத்தி அட்டூழியத்தில் ஈடுபட்டுத் தப்பித்துள்ளது என மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் நேற்று (08) பிற்பகல் இடம்பெற்றது. இரண்டு மோட்டார் சைக்கிளில் 6 பேர் கொண்ட கும்பல் வந்தது. வீட்டின் வாசல் படலையை கூரிய ஆயுதல்களால் தாக்கி கும்பல் சேதப்படுத்தியது. வீட்டு முற்றத்தில் தரித்து நின்ற முச்சக்கர வண்டியை அடித்து சேதப்படுத்திய கும்பல், வீட்டின் யன்னல்கள் கண்ணாடிகளையும் கூடிய ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பித்தது என்று வீட்டின் உரிமையாளரால் செய்யப்பட்ட முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

அந்தக் குடும்பத்தை அச்சுறுத்தும் வகையிலேயே வாள்வெட்டுக் கும்பல் ஒன்று இவ்வாறு அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது. சந்தேகநபர்கள் விரைவில் கைது செய்யப்படுவர் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments