Header Ads

test

குடாநாடெங்கும் கண்டன ஆர்ப்பாட்டங்கள்!


மாணவி ரெஜினாவின் படுகொலைக்கு நீதிகோரி சுழிபுரம் தொடக்கம் சங்கானை வரையில் இன்று காலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.


மாணவி ரெஜினாவின் படுகொலைக்கு நீதி கோரியும் போதைப்பொருள் விற்பனை பயன்பாட்டைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரியும் இன்று 29ம் திகதி  சுழிபுரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் மாணவர்கள்,அரசியல் தரப்பினை சேர்ந்தவர்கள் மற்றும் பொது அமைப்புக்களை சேர்ந்தவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டகாரர்கள் போராட்ட முடிவில் சங்கானை பிரதேச செயலரிடம் தமது மகஜரொன்றை கையளித்திருந்தனர்.

இதனிடையே மகளிர் அமைப்பினை சேர்ந்தவர்கள் யாழ்.நகரின் பிரதம தபாலகம் முன்பதாக அடையாள கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்தியிருந்தனர்.

No comments