வடமாகாணசபைக்கு ஆயுள் எவ்வளவு?
வடக்கு மாகாண சபையின் கால எல்லை தொடர்பில் பல்வேறு விதமான கருத்துகள் வெளியாகும் நிலையில், அவை குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் தேர்தல்கள் ஆணையாளருக்கும் மாகாண சபை கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாக, அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
மாகாண சபையின் அமர்வு, கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் இன்று (12) இடம்பெற்றது. இதன்போது, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர்,“மாகாண சபையின் ஐந்தாண்டு காலம் முடிவடைவதற்கு இன்னும் சில மாதங்கள் இருக்கின்ற நிலையில், மாகாண சபையின் முடிவடையும் கால எல்லைகள் குறித்து ஊடகங்களில் பல்வேறுபட்ட கதைகள் வெளியாகி வருகின்றன.
“இந்நிலையில் முதலாவது வடக்கு மாகாண சபை கடந்த 25.10.2013ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்தச் சபையின் ஐந்தாண்டுகள் காலம் எதிர்வரும் ஒப்டோபர் 25ஆம் திகதியுடன் முடிவடைகிறதென்பதை வெளிப்படுத்தியே இந்தக் கடிதத்தை அனுப்பி வைத்திருக்கின்றேன்” என்றார்.
Post a Comment