தெல்லிப்பளை வைத்தியசாலையில் குழப்பம் விளைவித்ததாக மூன்று இளைஞர்கள் கைது
தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலையில் குழப்பம் விளைவித்த குற்றசாட்டில் மூன்று இளைஞர்கள் தெல்லிப்பளை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மல்லாகம் பகுதியில் நேற்றிரவு பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். குறித்த இளைஞனின் சடலம் தெல்லிப்பளை வைத்திய சாலையில் உடல் கூற்று பரிசோதனைக்காக வைக்கபட்டு உள்ளது.
அந்நிலையில் நேற்றிரவு தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு சென்ற இளைஞர்கள் அங்கு குழப்பத்தில் ஈடுபட்டார்கள் என வைத்தியசாலை நிர்வாகத்தினால் தெல்லிப்பளை பொலிசாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டது.
முறைப்பாட்டின் பிரகாரம் வைத்திய சாலைக்கு சென்ற பொலிசார் மூன்று இளைஞர்களை கைது செய்துள்ளனர்.
Post a Comment