தென்னிலங்கை மீனவர்களிற்கு ஓட்சிசன்:கூட்டமைப்பு அனுமதி!
வடமராட்சி கிழக்கில் அத்துமீறி தொழிலில் ஈடுபட்டுள்ள தென்னிலங்கை மீனவர்கள் சட்டவிரோதமாக மந்திகையில் இயங்கிவரும் ஒட்சிசன் மீள்நிரப்பு நிலையத்திலேயே ஒட்சிசனை மீள்நிரப்புகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் வெளி மாவட்ட முஸ்லீம் மீனவர்களால் வாடி அமைத்து கடலட்டை பிடிப்பதற்கான மந்திகையில் உள்ள ஒரு கட்டிட தொகுதியிலேயே ஒட்சிசன் நிரப்பி கொடுக்கப்படுகின்றது.அவரே தற்போது வடமராட்சி கிழக்கில் அத்துமீறி நிலைகொண்டுள்ள தென்னிலங்கை மீனவர்களிற்கும் ஒட்சிசனை மீளநிரப்பி வழங்கிவருவதாக தெரியவருகின்றது.
அதன் உரிமையாளர் பருத்தித்துறை பிரதேச சபையின் அனுமதியுடனே இதனை செய்வதாக கூறிவருகின்றார். வெளி மாவட்ட மீனவர்களின் அத்துமீறல்களுக்கு கூட்டமைப்பு வசமுள்ள பருத்தித்துறை பிரதேச சபையினரும் துணை போகின்றார்களாவென மீனவ அமைப்புக்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதனிடையே குறித்த ஒட்சிசன் மீள்நிரப்பு தொழிற்சாலையானது சுற்றுச்சூழல் பாதுகாப்பு சபையின் அனுமதி உரிமம் இல்லையெனவும் அதே போன்று பிரதேச சபையின் வியாபார அனுமதி பத்திரம் இல்லையென்பதும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
ஓட்சிசனை மீள்நிரப்பும்; தொழிற்சாலை எந்தவிதமான அனுமதியும் இல்லாமலே தொழிற்பட்டு வருகின்றது. இன்றில் இருந்து தொழிற்சாலையை இயக்க வேண்டாம் என மீனவ அமைப்புக்கள் தெரிவித்த போதும் தொடர்ந்து நடத்துவேன் என்று உரிமையாளர் முரண்டு பிடித்ததாக தெரியவருகின்றது.
இதனையடுத்து சுமந்திரனின் தீவிர விசுவாசியான பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் அரியகுமாரின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்த நிலையில் நாளை பிரதேச சபையின் சார்பில் காவல்துறையில்; முறைப்பாடு செய்வதாக கூறினார்.
பருத்தித்துறை பிரதேச சபையினால் இந்த தொழிற்சாலை மூடுவதற்கு மேமாத கடைசியில் ஏழு நாள் கால அவகாசத்தை கொடுத்துள்ளது. அந்த கால அவகாசம் கடந்த 2ம் திகதியுடன் முடிவடைந்த நிலையில் இதுவரை பிரதேச சபையினர் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தியமை சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.
வடமராட்சி கிழக்கில் நிலைகொண்டுள்ள தென்னிலங்கை மீனவர்கள் முறைப்படி கடலட்டை பிடிக்கவேண்டுமென்பதை சுமந்திரன் தரப்பினரது வாதமாக இருந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment