Header Ads

test

யாழில் வாள்வெட்டில் ஈடுபட்டவர் இளைஞர்களால் மடக்கிப் பிடிப்பு

கொக்குவிலில் வாள்வெட்டில் ஈடுபட்ட குழு ஒன்று அந்தப் பகுதி இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் வாள்வெட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம்இன்று (10) நண்பகல்வேளை நடந்துள்ளது.

நான்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த குழு ஒன்றே வாள்வெட்டை நடத்தியுள்ளது. வாள்வெட்டை நடத்திய குழுவைப் பிரதேச இளைஞர்கள் துரத்திச் சென்றனர். அந்தக் குழுவில் ஒருவர் மோட்டார் சைக்கிளுடன் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.

இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட நபர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

No comments