Header Ads

test

புங்குடுதீவில் கரையொதுங்கிய மன்னார் மீனவ உடலங்கள்!


யாழ்ப்பாணம் புங்குடுதீவு கடற்கரைப் பகுதியில் இருவேறு இடங்களில் கரை ஒதுங்கிய சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. மன்னார் கடலில் கடந்த வாரம் மீன்பிடிக்கச் சென்ற இருவரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்ததுடன் அவர்கள் தொழிலுக்குச் சென்ற படகு புங்குடுதீவில் கரை ஒதுங்கியிருந்தது.

இதனையடுத்து மன்னாரிலிருந்து குடும்பவத்தவர்கள் யாழ்ப்பாணம் வந்திருந்த நிலையில் சடலம் அடையாளம் காணப்பட்டிருந்தது.
தலைமன்னார் மேற்கினை சேர்ந்த தோ.கிறிஸ்ரின் கூஞ்ஞா(32வயது) மற்றும் தோ.எமல்ரன் கூஞ்ஞா(வயது 37) ஆகிய இருவரது சடலங்கள் அவையென குடும்பத்தவர்கள் அடையாளம் காட்டியிருந்தனர்.

இயந்திரக்கோளாறு காரணமாக கடலில் அலைக்கழிந்து இவர்கள் மரணித்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.
சடலங்கள் உருங்குலைந்திருந்த நிலையிலேயே மீட்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments