Header Ads

test

திருமலையிலும் கேபிளிற்கு ஆப்பு!

யாழ்ப்பாணத்தை தொடர்ந்து திருகோணமலை நகராட்சி மன்ற எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கேபில் ரிவி வயர்கள் மின்சார கம்பங்களில் கட்டப்பட்டிருப்பின் அவற்றை ஒரு வார காலத்திற்குள் அகற்றி மாற்று ஒழுங்கை கையாளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் நகரசபை எல்லைக்குள் உள்ள சகல கேபிள்; ரிவி உரிமையாளர்களுக்கம் திருகோணமலை நகரசபை தலைவர் நா.இராஜநாயகம் இன்று புதன்கிழமை (06) அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக எழுத்து மூலமான கடிதம் அனைத்து கேபிள் ரிவி உரிமையாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டள்ளது.

மின்சார கம்பங்களில் கட்டப்பட்டுள்ள கேபில் ரிவி வயர்களால் மின்சாரம் தாக்கப்பட்டு ஏனைய மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புக்களை கருத்தில் கொண்டு முன் எச்சரிக்கை காரணமாக கடந்த 30ம் திகதி இடம்பெற்ற சபையின் தீர்மானத்திற்கு அமைய இக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொள்ளாத கேபிள் ரிவி உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் நகராட்சி மன்றத் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே யாழ்ப்பாணத்தில் செயற்பட்டுவரும் யுஎஸ் கேபிள் நிறுவனத்தை தொடர்ந்து செயற்பட யாழ்.நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

No comments