கொள்கைப்பிடிப்புடனான ஜக்கியமே தேவை:சுரேஸ்!
தமிழ் மக்களின் நலனுக்காக அனைத்துத் தரப்பினரும் ஐக்கியப்பட வேண்டுமாக இருந்தால் கொள்கைப்பிடிப்பு முக்கியமானது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னிணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியிருக்கின்றார்.
வடக்கு முதலமைச்சரை ஜக்கியப்படுத்த தமிழரசு முற்பட்டுள்ளதுடன் சம்பந்தர் உள்ளிட்டவர்கள் அவரது நூல் வெளியிட்டில் பங்கெடுத்து கருத்து தெரிவித்திருந்தனர்.
அதற்கு பதிலளித்துள்ள சுரேஸ் தமிழ் மக்கள் சிதறடிக்கப்படாமல் இருப்பதற்கு கொள்கைப்பிடிப்புடன் ஐக்கியம் காணப்பட வேண்டும் என வவுனியாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போது ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னிணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கருத்துக்களை முன்வைத்திருக்கின்றார்.
இதனிடையே யுத்தம் முடிந்து ஒன்பது ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் யுத்ததில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்திடமிருந்து உதவியை பெற்றுக்கொடுக்க முடியாத நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை காணப்படுவதாகவும் சிவசக்தி ஆனந்தன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதன்போது ஈ. பி,ஆர்.எல்எவ் இன் வரலாற்றுக் குறிப்பேடு நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு கூடியிருந்தவர்கள் முன்னிலையில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழ் மக்களை வழிநடத்தக் கூடிய ஒரு கூட்டுத் தலைமை அவசியம் என குறிப்பிட்டார்.
தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டுமானால் அதற்கு வலுவான ஒரு கூட்டணியொன்று அவசியம் என்றும் வலியுறுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இதற்கு ஜனநாயக வழியில் எந்தவொரு கட்சியையும் சாராது பொது கொள்கையுடன் செயற்படக் கூடிய ஒரு தலைமை அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment