மல்லாகம் மக்களால் திருப்பி அனுப்பப்பட்ட சயந்தன்!
மல்லாகத்தில் நேற்றிரவு காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்திருந்தார். இதையடுத்து அங்கு பெரும் பதற்றம் நிலவியது. பொதுமக்கள் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், நேற்றிரவு 11 மணியளவில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார்.
எனினும், இங்கு வந்து அரசியல் செய்ய வேண்டாம் என கூறி அவரை பிரதேசமக்கள் அங்கிருந்து திருப்பி அனுப்பியுள்ளனர்.
Post a Comment