Header Ads

test

சுமந்திரன் முதலில் வருவாராம்?


தனது சட்டப்பாண்டியத்தில் நம்பிக்கை வைத்து மருதங்கேணியில் அடாத்தாக தங்கியுள்ள தென்பகுதி மீனவர்களை வெளியேற்ற சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்போவதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அதற்கு மருதங்கேணி மீனவர்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் அதனை மீறி வாடிகளை பிடுங்கி எறிவதற்கு செல்ல கூடாது. வாடிகளை பிடுங்கி எறிவதற்கான காலம் இதுவல்ல. அப்படி ஒரு காலம் வந்தால் நானே முதல் ஆளாக வந்து வாடிகளை பிடுங்கி எறிவேனெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வடமராட்சி கிழக்கில் அரச காணியில் அடாத்தாக தங்கியிருந்து கடலட்டை பிடிப்பதற்கான நிபந்தனைகளை மீறி சுமார் 1500ற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடற்றொழில் செய்து வருகின்றனர். இதனால் எமது மீனவர்கள் பல்வேறு பாதிப்புக்களை எதிர்கொண்டிருக்கிறார்கள். இது தொடர்பாக கடந்த ஞாயிற்றுகிழமை பிரதமரை சந்தித்து விடயங்களை கூறியிருக்கின்றோம்.

அதேபோல் கடந்த செவ்வாய்கிழமை புதிய கடற்றொழில் அமைச்சரை நானும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவும் சந்தித்து விடயங்களை கூறியிருக்கின்றோம். இதனடிப்படையில் கடலட்டை பிடிப்பதற்கான நிபந்தனைகளை உரிய முறையில் கடைப்பிடிக்கும்படி புதிய கடற்றொழில் அமைச்சர் கடற்றொழில் பணிப்பாளருக்கு கூறியிருக்கின்றார்.
ஆனாலும் அது கடைப்பிடிக்கப்படவில்லை. அதனை கண்டித்தே இன்று நாங்கள் முற்றுகைப் போராட்டத்தை நடத்தியிருக்கின்றோம். இதன்போது கடலட்டை பிடிப்பதற்கான நிபந்தனைகளை உரியமுறையில்  கடைப்பிடிப்பதாகவும், மீறுவோர் மீது சட்டநடவடிக்கை எடுப்பதாகவும் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகள் உறுதிபட கூறியுள்ளனர்.

ஆகவே நாங்கள் முற்றுகைப் போராட்டத்தை நிறுத்தியுள்ளோம்.  ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் மீண்டும் திங்கள்கிழமை தொடக்கம் முற்றுகைப் போராட்டம் நடாத்தப்படும். அது தொடர்ச்சியாகவும் நடாத்தப்படவுள்ளது. தென்பகுதி மீனவர்களின் வாடிகளை பிடுங்கி எறிவதற்கெல்லாம் போகவேண்டாம். அதற்கான சந்தர்ப்பம் இதுவல்ல. பிடுங்கி எறிவதற்கான சந்தர்ப்பம் வந்தால் நானே முன்வந்து வாடிகளைப் பிடுங்கி எறிவேன் என்றார்.

முன்னதாக சுமந்திரன் ஆஜராகி வாதிட்ட உதயன் -டக்ளஸ் அவமதிப்பு வழக்கு,பல்லைக்கழக மாணவர்கள் படுகொலை வழக்கென அனைத்துமே ஊத்தி மூடிக்கொண்டமை தெரிந்ததே.

No comments