Header Ads

test

அமைச்சர் மஸ்தான் விவகாரம்:நாளை ஆர்ப்பாட்டம்!

இலங்கையில் இந்துக் கலாசார அமைச்சுக்கு இஸ்லாமியரான நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் என்பரை துணை அமைச்சராக்கியமையை கண்டித்து நாளை வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. 


நாளை மாலை 4 மணிக்கு நல்லூர் முன்றலில் இந்து விவகார பிரதியமைச்சராக இந்து அல்லாத ஒருவர் நியமிக்கப்பட்டதை எதிர்த்து கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு சைவ மகா சபை அழைப்பு விடுத்துள்ளது.

இப்போராட்டத்தில் சைவ சமையிகள் அணி திரண்டு எதிர்ப்பை பதிவு செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.

இதனிடையே இந்துமத விவகார பிரதி அமைச்சு, காதர் மஸ்தானிடம் வழங்கப்பட்டமை இந்து மதத்தை அவமதிக்கும் செயலாகும்.அவ்வமைச்சு அவரிடம் இருந்து மீளப்பெறப்பட்டு இந்து ஒருவரிடம் வழங்கப்படுவதே நியாயமானதாகும்.அதனை இந்த அரசும் அதற்கு முண்டுகொடுக்கும் கூட்டமைப்பும் செய்யாவிட்டால் இந்து அமைப்புக்களையும் மக்களையும் திரட்டி வடக்கு கிழக்கெங்கும் ஜனநாயகப்போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் சட்டத்தரணி சுகாஸ் கனகரத்தினம் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

ஜக்கிய தேசியக்கட்சி சார்பு நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான இந்துசமய இணை அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments