Header Ads

test

கூட்டமைப்பு சதியால் பறிபோன அங்கயனின் கதிரை!

தமிழர் ஒருவர் பிரதி சபாநாயகராக வருவதை கூட்டமைப்பினரே தடுத்து நிறுத்தியதாக பிரதமர் ரணில் விக்கரமசிங்கதெரிவித்திருந்தமையினை  நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ,ராமநாதனின் தந்தை சதாசிவம் இராமநாதன் அம்பலப்படுத்தியுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் ,ரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோரின் கடின முயற்சியின் காரணமாக, தமிழர் ஒருவர் பிரதிசபாநாயகர் ஆக வருவதை தடுத்து  தோற்;கடித்தமைக்கு நன்றிகள்.இதே வேகத்தில்  எமது தமிழர்களின் விடயத்தில்  விரைவையும்,வேகத்தையும் உண்மையாக  காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

 போர்க்குற்ற விசாரணை,அரசியல் தீர்வு,அரசியல் கைதிகளின் விடுவிப்பு,,ராணுவத்தை வெளியேற்றல்,பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு,காணிவிடுவிப்பு மற்றும் மீள்குடியேற்றம்,புனர்வாழ்வு பெற்றவர்களுக்கான தொழில் வாய்ப்புக்கள் இவற்றில் ஆமை வேகத்திலும்  அதீத அக்கறை இன்றியும் செயற்பட்டு , பிரதி சபாநாயகர் அந்தஸ்து தமிழர் ஒருவருக்கு கிடைக்காமல் தடுத்து  அஸ்தமிக்க செய்யும் இவர்களினால் சுயநல அரசியலை முன்னேடுப்பவர்களால் தமிழர்களுக்கான தார்மீக கடமை பொறுப்புக்களை பெற்றுக்கொடுக்க திராணியற்றவர்கள் கூட்டமைப்பினர் எனவும் விமர்சித்திருந்தார்.தமது தேவைகளுக்காக காலில் விழுந்து துதிபாடும் கூட்டமைப்பினர்,முதலில் யாழ் போதனா வைத்தியசாலையின் சுற்று கால்வாய்களில் காணப்படும் கழிவுகளை அகற்ற முதலில் நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக 48 வருடங்களின் பின்பு,நாடாளுமன்ற  உயரிய சட்டவாக்க சபையின்  பிரதி சபாநாயகர் அந்தஸ்து  கூட்டமைப்பினரின் சூழ்ச்சியினால் வீழ்த்தப்பட்டிருக்கின்றது. 48 ஆண்டுகளின் பின்பு தமிழர்களுக்கான  தலை குனிவை கச்சிதமாக ஏற்படுத்தியுள்ளனர் எனவும் கூட்டமைப்பினரின் வஞ்சனை வரலாற்றில் இன்று பதிவாகின்றது.பாராளுமன்ற அரசியலமைப்பு சட்ட சபையில் தன்மானத்தமிழன் ஒருவன் வரலாற்றில் நாட்டின்  உயரிய சபையில்  இடம்பெறாமல் வீழ்த்தப்பட்டிருக்கும் நிலையில்,தமிழர்களின்  ஒட்டுமொத்த அபிலாசைகளையும் தான்றோன்றித்தனமான முறையில் தாரைவார்க்கும் கைங்கரியங்களையே கூட்டமைப்பினர்  முன்னகர்த்துகிறார்கள்.இன்று நாடாளுமன்றில் அவை பட்டவனர்த்தமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றதெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments