கிளிநொச்சியில் கிணற்றுக்குள்ளிருந்து வெடிபொருட்கள் மீட்பு
கிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் பிரதேசத்தில் அமைந்துள்ள கிணறு ஒன்றில் இருந்து பயங்கர வெடிப்பொருட்கள் சிலவற்றை கிளிநொச்சி இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.
வீட்டுத் தோட்ட கிணற்றை சுத்தம் செய்யும் போதே இவ் வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாக, கிளிநொச்சி இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட வெடிபொருட்கள் யுத்த காலத்தில் விடுதலைப் புலி உறுப்பினர்களால் விட்டுச் செல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், மீட்கப்பட்ட கிளேமோர் குண்டுகள் மற்றும் வெடிப்பொருட்கள் குண்டு செயழிலக்க செய்யும் வீரர்களால் அழிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிளிநொச்சி பொலிஸார் இச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Post a Comment