மஸ்தான் நியமனம்:போர்க்கொடி தூக்கும் தமிழ் தரப்புக்கள்!
இலங்கையில் இந்துக் கலாசார அமைச்சுக்கு இஸ்லாமியரான நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான் என்பரை துணை அமைச்சராக்கியமை இந்துக்களை நசுக்கும் முயற்சியாகவே பார்க்கிறோமென ஈழம் சிவசேனை அமைப்பு அறிவித்துள்ளது.
உருவ வழிபாட்டையே ஒத்துக்கொள்ளதவர், இந்துக்களை இசுலாமுக்கு மத மாற்றுவதையே இலக்காகக் கொண்ட குழுவை சார்ந்தவர், இந்துக்கள் வழிபடும் மாடுகளைக் கொன்று உண்பவரை அமைச்சராக்கியதன் மூலம் அரசு இந்துக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்துவதாக ஈழம் சிவசேனையின் தலைவர் மறவன்புலோ சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.குறிப்பாhக மட்டக்களப்புக் கல்லடியில், அம்பாறைக் கல்முனைக்குடியில் இந்துக் கோயில்களின் மேல் பள்ளிவாயில்களைக் கட்டியெழுப்பியதை எப்பொழுதும் கண்டிக்காத ஒருவர்; இந்துக் கலாசார அமைச்சின் துணை அமைச்சரா என ஈழம் சிவசேனை கேள்வி எழுப்பியுள்ளது.
இதனிடையே இந்துமத விவகார பிரதி அமைச்சு காதர் மஸ்தானிடம் வழங்கப்பட்டமை இந்து மதத்தை அவமதிக்கும் செயலாகும்.அவ்வமைச்சு அவரிடம் இருந்து மீளப்பெறப்பட்டு இந்து ஒருவரிடம் வழங்கப்படுவதே நியாயமானதாகும்.அதனை அரசு செய்யாவிட்டால் இந்து அமைப்புக்களையும் மக்களையும் திரட்டி வடக்கு கிழக்கெங்கும் ஜனநாயகப்போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் சட்டத்தரணி சுகாஸ் கனகரத்தினம் அறிவித்துள்ளார்.
ஜக்கிய தேசியக்கட்சி சார்பு நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான இந்துசமய இணை அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment