Header Ads

test

விழாவிற்கு வந்த டக்ளசையும் விட்டுவைக்காது வாங்கிய விக்கி


வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனின் ”நீதியரசர் பேசுகிறார்” நூல் வெளியீட்டு விழாவிற்கு ஈபிடிபியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தோவானந்தா வருகைதந்திருந்தார். சிறிது நேரம் அங்கிருந்துவிட்டுச் சென்றிருந்தார்.

அதன்பின் தனது உரையில் டக்ளஸ் தேவானந்த பற்றிக் குறிப்பிட்ட முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்,

“நண்பர் டக்ளஸ் தேவானந்தா சற்று முன் வந்திருந்து போய்விட்டார். மத்தியில் கூட்டாட்சி மாகாணத்தில் தன்னாட்சி என்று கூறிவிட்டு மத்தியின் முகவர்களாக நடந்து கொண்டு வந்திருப்பவர்கள் எமது பயணத்திற்கு இடையூறு விளைவிக்கக் கூடியவர்கள். அதே போல் தேசியக்கட்சிகளின் அங்கத்தவர்கள் மத்தியின் கட்டுப்பாடுகளுக்குக் கட்டுப்பட்டவர்கள். அவர்கள் எமது உறவுகளாக இருந்தாலும் எமது பயணத்தில் சேரக்கூடியவர்கள் அல்ல” - என்றார்.

No comments