Header Ads

test

மக்கள் காதர் பிரிந்தார்!

மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளர் மக்கள் காதர் காலமாகியுள்ளார்.
மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளரும்,பிரபல எழுத்தாளரும்,கலைஞருமான மக்கள் காதர் என அழைக்கப்படும் எம்.ஏ.காதர் தனது 75 ஆவது வயதில் இன்று ஞாயிற்றுக்கிழமை(10) காலை காலமானார். நீண்ட நாற்களாக சுகவீனம் அடைந்திருந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.

மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளரான மக்கள் காதர் மன்னார் மாவட்டத்திற்கு பல்வேறு வகையிலும் பல்வேறு சேவைகளை மேற்கொண்டவர்.அவரது ஜனாசா' நல்லடக்கம் இன்று(10) ஞாயிற்றுக்கிழமை மாலை மன்னார் மூர்வீதியில் இடம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மக்கள் காதரிற்கு தனது அஞ்சலிகளை செலுத்தியுள்ள யாழ்.ஊடக அமையம் அவரது சேவையினை தமிழ் ஊடகப்பரப்பு என்றென்றும் நினைவுகூருமென தெரிவித்துள்ளது.

No comments