கறுப்பு ஜூலை படுகொலையின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!
ஜூலை மாதம் தமிழர்தம் வலி சுமந்தமாதம். சிங்கள அரசு 1983ஆம் ஆண்டில் இதே மாதத்தில் சிங்கள காடையர்களை ஏவி தமிழர்களின் உயிர், உடமைகள் அனைத்தையும் பறித்து, சொந்தநாட்டிலேயே தமிழர்களை அகதிகளாக்கியது. பாதுகாப்பு படையினர் மற்றும் காவற்படையினர் எனப்பெயரில் மட்டும் காவலை வைத்துக்கொண்டு, சிங்கள இனவாதம் கைகட்டி வேடிக்கை பார்த்த மாதம். சிறிலங்கா அரசு இரண்டே நாட்களில் மூவாயிரத்திற்கு மேற்பட்ட தமிழரை கொன்றும் இருபத்தையாயிரத்திற்கு மேற்பட்டோரை ஊனமுமாக்கியது.
காலம்காலமாக சிங்கள அரசு திட்டமிட்டு அரங்கேற்றிவரும் இனப்படுகொலைகளின் கோரமுகமே ஜுலை இனவழிப்பு.
இதன் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 23-07-18 திங்கள்கிழமை அன்று Dam Plein,Amsterdam ல் காலை பத்து மணியிலிருந்து மாலை நான்குமணிவரை நினைவுகோரப்பட இருக்கின்றது .ஆகவே அனைவரும் இந்நிகழ்வில் பங்குகொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றோம்.
Post a Comment