500 ஆவது நாளை எட்டிய காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம்!
கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் இன்று 500 ஆவது நாளை எட்டியுள்ளது.
கடந்த 20-02-2017 அன்று கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் எவ்வித தீர்வு இன்றி 500 ஆவது நாளை எட்டியுள்ளது.
இன்றைய தினம் வடக்கு கிழக்கைச் சேர்ந்த எட்டு மாவட்டங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒன்று சேர்ந்து கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். சர்வதேசமே எமக்கு உள்நாட்டு பொறிமுறையில் நம்பிக்கையில்லை, ஐ.நாவே எங்கள் பிள்ளைகளுடன் நாங்கள் வாழும் உரிமையை உறுதிசெய், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பட்டியலை வெளியிடு, 500 ஆவது நாளில் ஏழு அம்மாக்கள் இறந்துள்ளனர், சர்வதேசமே இலங்கை அரசு சர்வதேசத்திற்கு ஒன்று, எங்களுக்கு ஒன்று, கூறி ஏமாற்றுவது உங்களுக்கு புரியவில்லையா?, ஐ.நாவே பன்னாட்டு தலையீட்டுடனான நீதி பொறிமுறையே எமது தேவை, சர்வதேசமே இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடு போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
Post a Comment