Header Ads

test

அமெரிக்காவில் படகு கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிப்பு!

அமெரிக்காவின் மிசவுரி மாகாணத்தின் பிரான்சன் பகுதியில் உள்ள டேபிள் லாக் ஏரியில் படகு கவிழ்ந்ததில் சுற்றுலாப் பயணிகள் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலரைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

நேற்று வியாழக்கிழமை இரவு 30-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஒரு படகில் சென்று கொண்டிருந்தனர். ஏரியின் மையத்தில் சென்றபோது, படகு திடீரென கவிழ்ந்தது.

இந்த விபத்தில் படகில் இருந்தவர்கள் அனைவரும் ஏரியில் வீழ்ந்து மூழ்கினர். எனினும் அங்கிருந்த மீட்புக் குழுவினர் பயணிகளை மீட்பதற்குப் போராடினர்.

ஏரியில் மூழ்கிய 7 பேரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஏரியில் மூழ்கி உயிரிழந்த 8 பேரின் உடல்கள மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மூழ்கியுள்ள மற்றவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் சுற்றுலா சென்ற படகு மூழ்கிய விபத்தில் 8 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

No comments