மன்னார் புதைகுழி: அடித்து அல்லது வெட்டிக்கொலை?
மன்னாரில் அகழ்வுப் பணிகள் இடம்பெறும் பாரிய மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 53 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளநிலையில் அவர்கள் கூரிய ஆயுதங்களால் வெட்டப்பட்டோ தாக்கப்பட்டோ கொல்லப்பட்டிருக்கலாமென சட்ட மருத்துவ அதிகாரி எஸ்.ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மன்னார் நகர நுழைவாயிலில், பழைய சதோச கட்டடம் இருந்த பகுதியில், மன்னார் நீதிவான் பிரபாகரன் முன்னிலையில் இந்த அகழ்வுப் பணி கடந்த 41 நாட்களுக்கு மேலாக இடம்பெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று வரை 53 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 34 எலும்புக்கூடுகள் முத்திரையிடப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மீட்கப்பட்ட எந்தவொரு மனித எலும்புக்கூட்டு தொகுதியிலும் துப்பாக்கி ரவை காயங்கள் காணப்படவில்லை.இதனால் அனைவரும் சித்திரவதைகளின் பின்னர் கொல்லப்பட்டமை உறுதியாகியுள்ளது.
அதேபோன்று புதைகுழி சீரற்று இருப்பதால் அவசர அவசரமாக கொல்லப்பட்டவர்கள் புதைக்கப்பட்டிருக்கலாமென்ற சந்தேகம் எழுந்துள்ளது.வழமையான கிரியைகளின் பின்னர் புதைக்கப்பட்டவர்களது புதைகுழி போன்றல்லாது ஒன்றாக கொல்லப்பட்ட அனைவரும் புதைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் குறித்த புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூட்டு எச்சங்களின் பிரகாரம் படுகொலையானவர்கள் கொல்லப்பட்;ட காலப்பகுதி பற்றிய தகவலை வெளியிட ஆய்வாளர்கள் பின்னடித்துவருகின்றனர்.
Post a Comment