Header Ads

test

விஜயகலா விவகாரம்! ரணிலின் உரையின் போது கடும் எதிர்ப்பு!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தில் தற்போது உரையாற்றிக்கொண்டிருக்கின்றார். அவருடைய, உரைக்கு ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற சிலர், கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு கோசமெழுப்பினர்.

இதன் சபையில் சற்று பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டது. எனினும், பிரதமரின் உரைக்கு பின்னர், நாடாளுமன்ற நடவடிக்கைகள் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தப்பட்டது.

நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில், சபாநாயகர் கரு ஜயசூரிய, விசேட அறிவிப்பொன்றை விடுத்ததை அடுத்தே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கருத்துரைத்தார்.

“இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் உரைதொடர்பில், அவரிடம் கேட்டறிந்துகொள்வதற்கு, கொழும்புக்கு அழைத்துள்ளேன். அவர், சுகயீனம் காரணமாக, யாழ்ப்பாணத்தில் உள்ளார்” என்றார்.

இன்றையதினம் ​கொழும்புக்கு வருகைதருவதாக உறுதியளித்தார் என்று தெவித்த பிரதமர், அவர், வந்தவுடன், அவரிடம் கேட்டறிந்துகொண்டு, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

எங்களுடைய அரசியல் குழு, நேற்றிரவு கூடியது, விஜயகலா மகேஸ்வரனின் உரைதொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அந்த விவகாரம் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது என்றார்.

“அரசாங்கமும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கியத்தை பாதுக்காக்கும் நடவடிக்கையிலேயே ஈடுபட்டுள்ளது. எல்.ரி.ரி.ஈ, தடைச்செய்யப்பட்ட இயக்கமாகும். அவ்வியக்கத்தை மீண்டும் உருவாக்கவேண்டிய தேவை எமக்கில்லை” என்றும் பிரதமர் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments