ஆவா குழுவை பிடிக்க தயாராகும் காவல்துறை!
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஆவா குழுவை கட்டுப்படுத்த சகல இலங்கை காவல்துறையினரது விடுமுறைகளும் மறுஅறிவித்தல் வரையிலும் இரத்துச் செய்யப்பட்டுள்ளனவென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான கட்டளை, வடமாகாண சிரேஸ்ட காவல்துறை அதிபர் காரியாலயத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் தற்போதைய நிலைமை, ஆவா உள்ளிட்ட குழுக்களின் செயற்பாடுகள் உள்ளிடவற்றை கவனத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென, அக்காரியாலயம் அறிவித்துள்ளது.
சட்டம் ஓழுங்கைப்பேண காவல்துறை தவறியுள்ளதான குற்றச்சாட்டுக்கள் மத்தியில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Post a Comment