சங்ககாரவுக்கு ஆதரவில்லை - சரத் பொன்சேகா
அடுத்த அதிபர் தேர்தலில் போது வேட்பாளரைத் தாம் ஆதரிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.
சிறிலங்கா துடுப்பாட்ட அணியின் முன்னாள் தலைவர், குமார் சங்கக்கார அடுத்த அதிபர் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறக்கப்படுவாரா என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த சரத் பொன்சேகா,
சங்கக்கார ஒரு மிகச் சிறந்த துடுப்பாட்ட வீரராக இருந்தலும், அவர் ஒரு சிறந்த அரசியல்வாதியாக இருப்பார் என்று நான் நம்பவில்லை.
அரசியலை புரிந்து கொள்வதற்கு 7, 8 ஆண்டுகள் அரசியலில் பணியாற்ற வேண்டியிருக்கும்.
அதிபர் தேர்தலில் ஐதேக தலைவருக்கு அல்லது அவரால் தெரிவு செய்யப்பட்டவருக்குத் தான் நான் ஆதரவு அளிப்பேன். இறக்குமதி செய்யப்படும் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கமாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
Post a Comment