Header Ads

test

வடக்கில் அரைவாசிக்கு மேல் விடுவிக்கப்படாத காணி!


வடக்கில் சுமார் 50 சதவீதமே காணிகளே திரும்பக்கொடுக்கப்பட்டிருக்கின்றன.  மேலும் 50சதவீதம் திரும்பக்கையளிக்கப்படவேண்டும் என்று வடமாகாண முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளி நாட்டமைச்சர் திலக் மாரபன, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன மற்றும்  வடமாகாண முதலமைச்சர் இடையே சந்திப்பொன்று இன்று யாழ்ப்பாணத்தில் நடந்திருந்தது.

வட மாகாணத்தில் காணிகள் திருப்பிக்கொடுப்பது ஆமைவேகத்தில் செல்வதாகவும் விடுவிக்கப்பட்ட காணிகளில் கூட பல மக்கள் திரும்பப் போய்க் குடியிருக்கவில்லை என்றும் வெளிவிவகார அமைச்சர் கருத்து தெரிவித்திருந்தார். 

அதை மறுத்திருந்த வடக்கு முதலமைச்சர் பலகாரணங்களால் மக்கள் மீள் குடியேறவில்லைஎன்பதைஎடுத்துரைத்தார். காணிகள் கிடைத்தும் வீட்டுத்திட்டம் தமக்குக் கிடைக்காததால் வீடுகட்டமுடியாமல் காணியில் குடியேறாமை. காணிகளுக்கு அருகில் இராணுவம் குடிகொண்டிருப்பதால் தமதுகாணிகளில் மீள்குடியேற முடியாத நிலை. விடுவித்தும் சிலகாணிகளை இராணுவம் விட்டு வெளியேறாத படியால் குடியேறமுடியாமை என்பவற்றினை முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இதனிடையே 82 சதவீத காணிகள் விடுவிக்கப்பட்டதாக இராணுவம் கூறியதைமறுத்து 2009ல் இருந்து இந்தவிபரங்கள் தரப்படுகின்றன என்று சுட்டிக்காட்டி 2013ல் இருந்தே நாம் விடுவிக்கப்பட்ட காணி பற்றி பேசவேண்டுமெனவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 

No comments