Header Ads

test

அசாதாரண நிலமைகளை ஆராய் யாழ் வருகிறார் பொலிஸ் மா அதிபர்


பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர நாளை மறுநாள் யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மையான வாரங்களாக யாழ் குடாநாட்டில் தொடர்ச்சியான வன் செயல்கள் நடைபெற்றுவரும் நிலையில் இவ் அசாதாரண நிலமைகள் தொடர்பில் நேரில் ஆராயும்பொருட்டு பொலிஸ் மா அதிபர் யாழ் வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரது யாழ் விஜயத்தின்போது பொலிஸ் அதிகாரிகள், ஆளுநர், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டவர்களைச் சந்தித்து யாழ் நிலமைகள் குறித்து ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments