மத்தலவை வாங்கும் திட்டமில்லை - கைவிரித்தது இந்தியா
சிறிலங்காவின் மத்தல விமான நிலையத்தைக் கட்டுப்படுத்தும் பங்குகளை வாங்குவது தொடர்பாக இந்திய விமான நிலையங்கள் அதிகார சபையிடம் எந்தவொரு திட்டமும் இல்லை என்று இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்திய நாடாளுமன்றத்தில் நேற்று பாஜக உறுப்பினர் பூனம் மகாஜன், ‘மத்தல விமான நிலையத்தை கொள்வனவு செய்யத் திட்டமிட்டுள்ளதா’ என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு, சிவில் விமான போக்குவரத்து இணை அமைச்சர் ஜயந்த் சின்ஹா பதிலளிக்கும் போதே,’ இல்லை, தற்போது அத்தகைய திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை\ என்று தெரிவித்தார்.
மத்தல விமான நிலையத்தில் இந்திய விமான நிலையங்கள் அதிகார சபை, விமானிகள் பறப்பு பாடசாலை, பழுதுபார்க்கும், புதுப்பிக்கும், அலகுசு ஒன்றை நிறுவப் போகிறதா என்று பாஜக உறுப்பினர் எழுப்பியிருந்த கேள்விக்கு, இணை அமைச்சர் சின்ஹா எதிர்மறையான இந்தப் பதிலை அளித்துள்ளார்.
முன்னதாக, கடந்த 19ஆம் நாள், சிறிலங்காவின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது, மத்தல விமான நிலையத்தை இயக்குவதற்கான வணிகத் திட்டத்தை சமர்ப்பிக்குமாறு இந்திய விமான நிலையங்கள் அதிகார சபையிடம் கோரியுள்ளதாக தெரிவித்திருந்தார்.
ஆனால் இந்தியத் தரப்பில் அதற்கு மாறான பதில் அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment