Header Ads

test

பாதுகாப்பு எனும் பெயரில் இராணுவத்துடன் ஒட்டி உறவாடும் சுமந்திரன்



எஸ்.ரி.எப் பாதுகாப்புடன் சுற்றித்திரியும் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் நிகழ்வுகளில் கூட பாதுகாப்பு எனும் பெயரில் தனக்கு மிக நெருக்கமாக இராணுவத்தினரை வைத்துக்கொள்வதை அண்மைய சில காலமாக மேற்கொண்டுவருகின்றார்.

சிறிலங்காவின் ஜனாதிபதி, பிரதமருக்கு பெருமெடுப்பிலான பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்கப்படுகின்றபோதிலும் எஸ்.ரி.எவ் இனையோ இராணுவ அதிகாரிகளையோ தனக்கு அருகில் அமர்த்தி பாதுகாப்பு தேடிக்கொள்ளாத நிலையில் எம்.ஏ. சுமந்திரன் எஸ்.ரி.எவ் இனரை எந்நேரமும் கூடவே வைத்திருப்பது தமிழரசுக் கட்சிக்கு மக்கள் மத்தியில் மேலும் விரிசலையே உண்டாக்கும் என தமிழரசுக் கட்சியின் சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கடந்த உள்ளூராட்சித் தேர்தலின் போது பிரச்சாரக் கூட்டங்களில் எஸ்ரிஎவ் பாதுகாப்புடன் வலம்வந்த சுமந்திரனின் கூட்டங்களுக்கு வந்த மக்களிடம் உடற்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டமை மக்கள் மத்தியில் கொந்தளிப்பினை உருவாக்கியிருந்தது.  தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் மத்தியிலும் சுமந்திரனின் செயல் விமர்சிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் எஸ்ரிஎவ்வுடன் வந்த சுமந்திரன் நிகழ்வு முடியும்வரை தனக்கு அருகிலே் கதிரை வைத்து ஒரு பாதுகாவலரை அமர்த்தியிருந்தார். இதேவேளை குறித்த நிகழ்வில் பங்கேற்றிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு பிரிவினர் சற்றுத் தொலைவிலிருந்தே கடமையில் ஈடுபட்டிருந்தமையும் அவதானிக்கப்பட்டது.

No comments