Header Ads

test

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் யாழில்!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொதுச் செயலாளரும் தமிழ் நாடு கடையநல்லூர் சட்ட மன்ற உறுப்பினருமான கே. எம்.ஏ.முஹம்மத் அபூபக்கர் யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் (23) விஜயம் செய்ததுடன் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துள்ளார்.
யாழ்ப்பாணம் வருகை தந்த அவர்  மஸ்ஜிதுல் முஹம்மதியா  பள்ளிவாசலில் யாழ்ப்பாணம் முஸ்லீம் பிரதிநிதிகள் சிலருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார்.

பின்னர் ஒஸ்மானியாக் கல்லூரி, யாழ் வணிகர் கழகம்  நல்லூர் பகுதி , மற்றும் யாழில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் பல தரப்பினரையும் சந்தித்துள்ளார்.

இவரது இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா வட மாகாண சபை அவைத்தலைவர்  சி.வி.கே.சிவஞானம், வடக்கு மாகாண எதிர்கட்சி தலைவர்   அ.தவராசா  மாகாணசபை உறுப்பினரான அய்யூப் அஸ்மின் சயந்தன்    ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பொதுச் செயலாளராக என்.ஏ. எம். ஸாதிக் ஷிஹான்  மற்றும் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்

No comments