சதிக்கு துணைபோகின்றனவா மீனவ அமைப்புக்கள்?
இந்திய மற்றும் இலங்கை அரசுகளது ஏமாற்றுவேலைகளிற்கு உள்ளுர் மீனவ அமைப்புக்கள் துணைபோவதாக மீனவ சங்கங்களின் சம்மேளனத்தலைவர் வே.தவச்செல்வம்
குற்றஞ்சாட்டியுள்ளார்.டெல்லியில் நடைபெறவுள்ள இந்திய இலங்கை அரசுகளது மீன்பிடி அமைச்சின் சந்திப்புதொடர்பில் முன்னேற்பாட்டு கூட்டமொன்று கொழும்பில் நடந்துள்ளது.இக்கூட்டத்தில் வடக்கின் ஒரு சில மீனவ சங்கங்கள் பங்கெடுத்திருந்தன.எனினும் பலம் வாய்ந்த மீனவ அமைப்பான மீனவ சங்கங்களின் சம்மேளன் புறக்கணிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே இந்திய அரசினை நம்பி பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டாம் என வடமாகாண கடற்றொழிலாளர் சங்க இணையத்தின் பிரதிநிதிகள் நேற்று முன்தினம் இலங்கை மீன்பிடி அமைச்சரைச் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
மன்னார் மாவட்டப் பிரதிநிதி ஆலம் , யாழ்ப்பாண மாவட்டப் பிரதிநிதி சுப்பிரமணியம் உள்ளிட்ட நால்வரே இவ்வாறு கடற்றொழில் நீரியல் வளத் துறை அமைச்சரை நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். குறித்த சந்திப்பின்போது இந்திய மீனவர்களின் ஊடுருவல் மற்றும் இந்திய இழுவைப் படகுகளின் விடுவிப்புத் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
எமது மாகாண மீனவர்களின் தீராத பெரும் பிரச்சணை இந்திய மீனவர் ஊடுருவல்தான. இது தொடர்பில் இந்தியா தரப்பில் பல தடவை பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டது. இருப்பினும் ஒன்றைக்கூட நிறைவேற்றப்படவில்லை. எனவே இந்தியாவை நம்பி இனிமேலும் பேசக்கூடாது. அத்துடன் இங்கே தடுத்து வைத்திருக்கும் இந்தியப் படகுகளில் ஒரு படகினைக்கூட விடுவிக்கவே கூடாதென பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் இதனை புறந்தள்ளி கருத்து தெரிவித்த அரச அமைச்சர் அடுத்த கட்டமாக இந்திய மீனவர்களின் 10 இழுவைப் படகுகள் விடுவிக்கப்படவுள்ளதாக அமைச்சர் கருத்து தெரிவித்ததோடு அவர்களின் படகுகளை தடுத்து வைப்பதாலும் எந்தப் பயனும் கிடைக்காது என தெரிவித்துள்ளார்.
Post a Comment