டெனீஸ்வரனை பொருட்படுத்த தேவையில்லை?
வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிபம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி மற்றும் மோட்டர் போக்குவரத்து அமைச்சரென கூறிக்கொண்டு பா.டெனிஸ்வரனால் முன்னர்; அவரது அமைச்சின் கீழ் இருந்த திணைக்கள தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தை கணக்கிலெடுக்க தேவையில்லையென முதலமைச்சர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
தற்போதைய முதலமைச்சரின் கீழான நிர்வாகத்தை குழப்பியடிக்க தமிழரசுக்கட்சியின் அறிவுறுத்தலில் பா.டெனீஸ்வரன் செயற்படுவதாக தெரியவருகின்றது.
முன்னதாக பா.டெனீஸ்வரனின் வசமிருந்த அமைச்சு தற்போது இல்லை.அது கலைக்கப்பட்டு நான்கு அமைச்சர்களிடமும் வழங்கப்பட்டுள்ளது.இல்லாத அமைச்சினை மீள வழங்குவதென்ற பேச்சிற்கே இடமில்லையென முதலமைச்சரது தனிப்பட்ட செயலாளர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்துள்ளார்.
இதனால் டெனீஸ்வரனின் கூத்துக்கள் தொடர்பில் பொருட்படுத்த தேவையில்லையென்பதே முதலமைச்சரது நிலைப்பாடு எனவும் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதனிடையே டெனீஸ்வரன் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில்
Post a Comment