இந்திய வெளிவிவகாரச் செயலருடன் சம்பந்தன் சந்திப்பு
இந்திய வெளிவிவகாரச் செயலர் விஜய் கேசவ் கோகலே, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
இரண்டு நாட்கள் பயணமாக இன்று சிறிலங்கா வந்துள்ள, இந்திய வெளிவிவகாரச் செயலர் விஜய் கோகலேக்கும், இரா சம்பந்தனுக்கும் இடையிலான இந்தச் சந்திப்பு நேற்று மாலை இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொண்டார்.
எனினும், இந்தச் சந்திப்பின்போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக இன்னமும் தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
Post a Comment