Header Ads

test

மீண்டும் புலிகள்: சிங்கள ஊடகவியலாளருக்கும் அழைப்பு!

விடுதலைப்புலிகளின் மீள் உருவாக்கம் பற்றிய கட்டுரையினை வெளியிட்ட சிங்கள ஊடகவியலாளர் ஒருவரை பயங்கரவாத தடுப்பு பிரிவில் முன்னிலையாகுமாறு பயங்கரவாத தடுப்பு பிரிவு அழைப்பு விடுத்துள்ளது.

அதன் பிரகாரம் குறித்த ஊடகவியலாளரை இன்று வெள்ளிக்கிழமை பயங்கரவாத தடுப்பு பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 

கடந்த ஜூன் 24 ஆம் திகதி விடுதலை புலிகள் மீள் உருவாக்கம் தொடர்பில் சிங்கள பத்திரிகையின் ஊடகவியலாளர் ஒருவர் கட்டுரையொன்றினை எழுதியிருந்தார்.

குறித்த கட்டுரை தொடர்பில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரிடம் வாக்குமூலம் ஒன்றினை பெற்றுக் கொள்வதற்காகவே  அழைக்கப்பட்டிருந்தார்.

இதேவேளை 2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் ஊடகங்களுக்கு முழுமையான கருத்து சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்ததாகவும், எனினும் தற்போது அரசாங்கத்தை விமர்சிக்கும் வகையில் செய்திகளை வெளியிடுபவர்கள் தொடர்ந்தும் புலனாய்வு பிரிவினரின் விசாரணைக்கு உட்படுத்தி வருவதாகவும் அரசியல் விமர்சகர்கள் பலரும் தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

No comments