காவல்துறையினை நம்ப தயாராக இல்லை:பணிப்பாளர்!
இலங்கை காவல்துறை தனது கடமைகளை ஆற்ற தவறிவருவதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் பு.சத்தியமூர்த்திகுற்றஞ்சுமத்தியுள்ளார்.
காவல்துறையின் செயல்பாடுகளில் எமக்கு நம்பகத் தன்மை கிடையாது. இருப்பினும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு தங்களிடமே உள்ளதனால் நாடுகின்றோம் என காவல்துறை எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் கொண்ட காவல்துறையினர் வெறும் பார்வையாளராக இருப்பின் சீரான நிர்வாகத்தை கொண்டு நடாத்த முடியாது. இதற்கு காவல்துறையின்; ஒத்துழைப்புத் தேவை. குடாநாட்டில்இடம்பெறும் வன்முறைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கும் காவல்துறையினர் குறைந்த பட்சம் மோதனா வைத்தியசாலையினதும் அதன் சுற்றுப்புரத்தையேனும் ஓர் அச்சமற்ற பகுதியாக பேண முடியாதுள்ளது.
இதன் காரணமா தினமும் 11 மணியை தாண்டினால் மதுபோதையில் வருபவர்களின் தொல்லையை காவலாளிகளினால் கட்டுப்படுத்த முடியாதுள்ளது. இது தொடர்பில் காவல்துறைக்கு அறிவித்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. குறிப்பாக கடந்த வாரம் இரவுவேளையில் காவலாளியை தாக்கி காயப்படுத்தி விட்டு வைத்தியசாலைக்குள் புகுந்தவர்களை காயமடைந்நவர் வைத்தியசாலையில் இருந்து வெளியேற முன்பே எந்த நடவடிக்கையும் இன்றி கைது செய்தவர்களை விடுவித்தமை சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.
இதேபோன்று வைத்தியசாலை விடுதியில் உள்ள சிலருக்கு இரவுவேளை திருட்டுத் தனமாக மதுபான விற்பனைக்கும் முயற்சிக்கின்றனர். இவற்றினை காவலாளிகள் கட்டுப்படுத்தினாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் காவல்துறைக்கே சாரும். இதுபோன்ற மேலும் சம்பவங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
Post a Comment