மீண்டும் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு!
இன்று நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பில் தொடருந்து சாரதிகள், காவலர்கள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் தொடருந்து அதிபர்கள் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள முரண்பாடுகளை சரி செய்வதற்கு அமைச்சரவை பத்திரத்தை அமுல்ப்படுத்துவதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு இடம்பெறவுள்ளதாக தொடருந்து சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே கடந்த 26 ஆம் திகதி மாலை சில தொடருந்து சங்கங்கள் இணைந்து திடீர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment