Header Ads

test

வரலாற்றுக் கதைவிடுகின்றது தொல்லியல் திணைக்களம்?

யாழ்ப்பாணம் கோட்டை உட்பகுதியில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூட்டில் இருந்து S.A எனும் எழுத்துப் பொறிக்கப்பட்ட தங்க மோதிரம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் கோட்டை உட்பகுதியில் பகுதியில் கடந்த வாரம் மனித எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த எலும்புக்கூடு போத்துக்கேயர் காலத்துக்குரியது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் மோதிரத்துடன் மீட்கப்பட்ட இந்த எலும்புக் கூடு, ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளது.

குறித்த மோதிரத்தில் காணப்படுகின்ற எழுத்து பொறிக்கும் முறை 1995 ஆம் ஆண்டுக்கு பின்னரே நடைமுறைக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த வகையில், 1995 ஆம் ஆண்டுக்கு பிற்பாடே குறித்த நபர் உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியிருப்பதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, அமெரிக்க பல்கலைக்கழகம், யாழ். பல்கலைக்கழகம், தொல்லியல் திணைக்களம், மத்திய கலாச்சார நிலையம் என்பன இணைந்து யாழ். கோட்டைப் பகுதியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், மனித எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்டு இருந்தது.

இந்த எலும்புக்கூடு போத்துக்கேயர் காலத்தில் அடக்கம் செய்யப்பட்டவரின் எலும்பு எச்சங்களாக இருக்கலாம் என தொல்லியல் திணைக்கள அதிகாரி நம்பிக்கை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments