Header Ads

test

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாவட்டமாக மாறுகிறது யாழ்ப்பாணம்!

யாழ்ப்­பா­ணத்­தில் வன்­மு­றை­களை கட்­டுப்­ப­டுத்த பொலி­ஸார் தவ­று­கின்­ற­னர். கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கை­கள் இறுக்­கப்­பட்­டாலே இவ்­வா­றான சம்­ப­வங்­கள் எதிர்­கா­லத்­தில் இடம்­பெ­றாது பாது­காக்க முடி­யும்.

பெண்­கள் வாழ்­வ­தற்கு ஆபத்­தான மாவட்­ட­மாக யாழ்ப்­பா­ணம் மாறி வரு­கின்­றதோ என்று சந்­தே­கிக்­க­ வேண்­டி­யுள்­ளது. இவ்­வாறு அர­சி­யல் பிர­தி­நி­தி­கள், பெண்­கள் அமைப்­புக்­க­ளின் பிர­தி­நி­தி­கள் தெரி­வித்­த­னர். வடக்கு மாகாண அவைத் தலை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம், இங்கு அரங்­கே­றிக் கொண்­டி­ருக்­கும் சமூக விரோ­தச் செயல்­க­ளுக்கு பொலி­ஸா­ரின் பல­வீ­னமே அடிப்­ப­டைக் கார­ண­மா­கும்.

சட்ட ஒழுங்கை அவர்­கள் இறுக்­க­மாக நடை­மு­றைப்­ப­டுத்­திக் குற்­ற­வா­ளி­களை விரைந்து கைது செய்­தால் அடுத்­த­டுத்து சம்­ப­வங்­கள் இடம்­பெ­றாது. முன்­னைய காலங்­க­ளில் இவ்­வா­றான சம்­ப­வங்­கள் நடந்­த­தில்லை. பொலி­ஸார் முறை­யான நட­வ­டிக்­கை­யில் இறங்க வேண்­டும் – என்­றார். வடக்கு மாகாண எதிர்­கட்­சித் தலை­வர் சி.தவ­ராசா, வன்­கொ­டு­மைச் சம்­ப­வத்­தில் மறைந்த மாணவி வித்­தி­யா­வின் வழக்­கில் எதி­ரா­ளி­க­ளுக்கு ஆத­ர­வாக இங்­குள்ள சட்­டத்­த­ர­ணி­கள் எவ்­வாறு முன்­னி­லை­யா­கா­மல் இருந்­தார்­களோ அதே­போல தற்­போது நடை­பெ­றும் சமூக விரோ­தக் குற்­றங்­க­ளுக்­கா­க­வும் சட்­டத்­த­ர­ணி­கள் முன்­னி­லை­யா­கக் கூடாது.


போரின் பின்­னரே இந்­தச் சமூக விரோத கலா­சா­ரம் தோன்­றி­யுள்­ளது. வெறு­மனே பொலி­ஸா­ரின் மீது மட்­டும் குற்­றம் சுமத்தி எந்­தப் பய­னும் இல்லை. இது சமூ­கம் சார்ந்த விட­யம். சமூக கட்­ட­மைப்­பாக நாம் குற்­றச் செயல்­க­ளைக் கட்­டுப்­ப­டுத்த முயற்­சிக்க வேண்­டும் – என்­றார். முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் க.சுரேஷ் பிரே­ம­சந்­தி­ரன், லட்­சம் படை­யி­னர் இங்கே இருக்­கின்­ற­னர். எவ்­வாறு இந்­தப் போதைப் பொருள்­கள் கடத்­தப்­ப­டு­கின்­றன.

இந்­திய மீன­வர்­களை கைது செய்­ய­மு­டி­கின்ற கடற்­ப­டை­யி­ன­ரால் கடல் மூலம் கடத்­தப்­ப­டு­கின்ற கஞ்சா போன்ற போதைப்­பொ­ருட்­களை ஏன் கட்­டுப்­ப­டுத்த முடி­யா­துள்­ளது. பொலி­ஸார் கைநீட்டி காசு வாங்­கு­கின்ற போது அவர்­க­ளால் எவ்­வாறு சட்ட ஒழுங்­கினை காப்­பாற்ற முடி­யும். கண­வ­னின் முன்­னால் அவ­ரது மனை­வியை வன்­கொ­டு­மைக்கு உள்­ளாக்­கின்ற நிலமை ஏற்­பட்­டுள்­ள­தெ­னில் பொலி­ஸா­ரின் சட்­ட­ஒ­ழுங்கு சீர­ழிந்­துள்­ளது.

பொலி­ஸார் இந்­தச் சம்­ப­வத்­துக்கு வெட்­கித் தலை­கு­னி­ய­வேண்­டி­யுள்­ளது – என்­றார். மக­ளிர் அபி­வி­ருத்தி நிலை­யத்­தின் தலை­வர் திரு­மதி சரோ­ஜினி சிவ­சந்­தி­ரன், பெண்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­கள் ஒழிக்­கப்­பட வேண்­டும் என்று பெண்­கள் போரா­டிக் கொண்­டி­ருக்­கின்­ற­னர். ஒரு சில இளை­யர்­கள் என்­ன­தான் போரா­டி­னா­லும் அடக்கி ஆளு­தல், வன்­மு­றை­க­ளைக் கட்­ட­விழ்த்­த­லில் ஈடு­ப­டு­கின்­ற­னர்.

போதைப் பொருள் பாவ­னை­யினை முழு­மை­யாக கட்­டுப்­ப­டுத்த வேண்­டும். எல்லா வன்­மு­றைக்­கும் இதுவே அடிப்­ப­டைக் கார­ணி­யா­கும். நக­ருக்­குள் மட்­டும் பொலி­ஸார் கண்­கா­ணிப்­பில் ஈடு­ப­டாது கிரா­மங்­க­ளி­லும் பொலி­ஸார் கண்­கா­ணிப்­புக்­க­ளில் ஈடு­ப­ட­வேண்­டும் – என்­றார்.

No comments