இந்தியாவின் அழைப்பு - வரிசைகட்டிய கூட்டமைப்பு அரசியல்வாதிகள் !
ஏதுவித காரணங்களுமின்றி அனைவரும் நிகழ்வில் பங்கேற்கவேண்டும் என்ற இந்தியாவின் ஒற்றைச் சொல்லுக்கு கட்டுப்பட்டு வடக்கு மாகாண முதலமைச்சர் முதற்கொண்டு முல்லைத்தீவிலிருந்து நாடாளுமன்ற உறுப்பின் சாந்தி சிறிஸ்கந்தராஜா வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்வாதிகள் அனைவரும் யாழில் பிரதமர் ரணில் பங்குபற்றிய நிகழ்வில் பங்கேற்றிருக்கிறார்கள்.
இந்திய மக்களின் பங்களிப்புடன் இந்திய அரசினால் வழங்கப்பட்ட அம்புலன்ஸ்களை இலங்கைக்கு வழங்கும் நிகழ்வு இன்று (21) யாழ்ப்பாணம் மாநகர மைதானத்தில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இலங்கைக்கா இந்தியத் தூதுவர் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்ததோடு இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி செய்மதித் தெலைக்காட்சி ஊடாக நேரலையாக நிகழ்வில் இணைந்திருந்தார்.
குறித்த நிகழ்விற்கே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, சரவணபவன் உள்ளிட்டோரும் வடக்கு மாகாண முலமைச்சர், வடக்கு அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் என தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் கலந்துகொண்டுள்ளனர்.
Post a Comment