Header Ads

test

கூட்டமைப்பின் பிழைகளைச் சுட்டிக்காட்டினால் கட்டியிலிருந்து வெளியேற வேண்டிய நிலை!

அரசாங்க கட்சிகள் (ஜக்கிய தேசிய கட்சி) கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் பணிகளை ஆரம்பித்து விட்டனர் மற்றைய அரசியல் கட்சிகளும் அவ்வாறுதான் ஆனால் வடக்கு கிழக்கின் தனிப்பெரும் கட்சியான தமிழரசுக் கட்சியும் தமிழ் தேசியகூட்டமைப்பும் அதுபற்றி கவனம் எடுக்கவில்லை இதுவே எமது கடந்த உள்ளுராட்சி தேர்தல் தோல்விக்குக்காரணம் என மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் கூறியுள்ளார். தனது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்களைச் சந்திக்கும் போது அவர் நேற்று இக்கருத்தினைத் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணதமிழ் மக்கள் ஒன்றுசேர்ந்தால் 15 ஆசனங்கள் நிட்சயம் எடுக்கலாம் அதற்கு தமது கட்சியான புளொட் எப்பவோ தயாராகி விட்டது. ஆனால் தமிழரசு கட்சியும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியின் தலைமைகளும் ஒன்று கூடி பேசாமல் இருந்து விட்டு கடைசி நேரத்தில் முன்னெடுக்கும் அவசர பணிகளால் தான் நாம் தோல்விகளை சந்திக்க வேண்டி வருகின்றது.

கட்சி தலைமை தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்பட கூடாது எனவும் கட்சியின் பிழைகளை சுட்டிக்காட்டினால் கட்சியிலிருந்து வெளியேற வேண்டிய நிலைமை காணப்படு கிறதெனவும் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் மேலும் கூறியுள்ளார்.


No comments