பொன்னாலையில் பேரூந்து விபத்து!
யாழ்ப்பாணத்தில் இருந்து காரைநகருக்கு சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச்சபை பேரூந்தொன்று பொன்னாலை பாலத்தில் குடைசாய்ந்துள்ளது. குறித்த பேரூந்து குடிநீர் விநியோக குழாய் பொருத்தப்பட்ட தூணில் தாங்கி சரிந்து நின்றமையால் பயணித்த மக்கள் மயிரிழையில் தப்பினர்.
சாரதிக்கு ஏற்பட்ட திடீர் தலைச்சுற்று காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment