Header Ads

test

இராணுவ ஹோட்டல்கள்:தகவல் மறுக்கும் தலைமை!

வடக்கிலும் கிழக்கிலும் இலங்கை இராணுவத்தினரால் நடத்தப்படும்; ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களின் விபரங்களை வழங்க தகவல் உரிமைச்சட்டத்திற்கான பாதுகாப்பு அமைச்சிற்கு ஆணைக்குழு பணிப்புரைவிடுத்துள்ளது. சர்வதேச ரீதியில் நிறுவப்பட்ட தகவல் உரிமை ஆணைக்குழு அரசாங்க நிதிகளில் இருந்து பணம் பெற்று சேவையினை ஆற்றுபவர்கள் அனைவரும் மக்களிற்கு தகவல்களை வழங்கவேண்டியவர்களென அது தனது பணிப்புரையில் சுட்டிக்காட்டியுமுள்ளது.

இதனிடையே குறித்த தகவல்களை வழங்க பின்னடித்துவரும் இலங்கை இராணுவ தளபதி குறித்த ஆணையம் கூறியது போன்று அரச பொது நிதிகளெதுவும் இலங்கை இராணுவத்தினரால் நடத்தப்படும்; ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களினில் சம்பந்தப்படவில்லை என்று வாதிட்டுவருகின்றார்.எனினும் இந்த வாதத்தை ஏற்றுக்கொள்ள ஆணையம் மறுதலித்துள்ளது.

வடகிழக்கில் இலங்கை இராணுவத்தினரால் நடத்தப்படும்; ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் தொடர்பாக பத்திரிகைகளால் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களை  ஆரம்பத்தில் இராணுவம் மறுத்திருந்தது.

எனினும், பாதுகாப்பு அமைச்சகத்தினால் தகவல்களுக்கு, இலங்கை விமானப்படை மற்றும் கடற்படை ஆகியவற்றில்;  பணியாற்றும் பாதுகாப்பு தரப்பின் விருந்தோம்பல் துறையினர் பற்றி  பின்னர் ஒப்புக்கொள்ளப்பட்டது.

முன்னதாக, பத்திரிகையாளர் கோரிய தகவல்களை வழங்க தனது அடையாள அட்டையின் நகலை வழங்குவதாக இராணுவம் வலியுறுத்தியிருந்தது.இதற்கு ஆணைக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கில் இராணுவம் ,கடற்படை மற்றும் விமானப்படையென  ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களினை நடத்திவருகின்றமை தெரிந்ததே.

No comments