அம்பாறையில் விபத்து! கணவன் மனைவி உயிரிழப்பு!
அம்பாறை - கல்முனை பிரதான வீதியின் வலதாபிட்டிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் கணவனும் மனைவியும் உயிரிழந்துள்ளனர்.
மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் வாகனம் ஒன்றும் சிற்றூர்த்தியும் ஒன்றோடு ஒன்று நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த சிற்றூர்தி ஓட்டுனர், அவருடைய மனைவி மற்றும் உறவினர் ஒருவரை அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் கணவனும் மனைவியும் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனா.
மஹன்போக, ஹத்திஸ்ஸ பகுதியை சேர்ந்த 56 வயதுடைய கணவரும் 45 வயதுடைய மனைவியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
விபத்து தொடர்பில் டிப்பர் வாகனத்தின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்மாந்துறை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment