யாழ் கோட்டைக்குள் இராணுவ முகாம் அமைப்பதற்கு எதிரான போராட்டத்திற்கு அழைப்பு
நாளை மறுதினம் ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 2 மணிக்கு கோட்டையின் தெற்குவாசல் பக்கமாக குறித்த போராட்டம் நடைபெறவுள்ளது.
தொல்பொருள் திணைக்களத்திற்குச் சொந்தமான கோட்டைக் காணியை இராணுவத்திற்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அங்கு இராணுவ முகாம் அமைக்கப்படக் கூடாதென வஙியுறுத்தியுமே இப் போராட்டம் முன்னெடுக்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இராணும் முகாம் அமைப்பதை நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி நடைபெறுகின்ற இப் போராட்டத்திற்கு சகலரையும் கலந்து கொள்ளுமாறும் ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Post a Comment