ஊடகங்களுக்கு சட்டம் தெரியாதாம் - சபையில் சாடிய சி.வி.கே
சட்டம் தெரியாத ஊடகங்கள் என வடக்கு மாகாண அவைத்தலைவ் சி.வி.கே சிவஞானம் ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் அவமதிக்கும் வகையில் கடுமையாக சாடியுள்ளார்.
இன்று வடக்கு மாகாண பேரவைச் செயலகத்தில் நடைபெற்ற சபை அமர்வில் அடிக்கடி ஊடங்கங்கள் கண்டதையும் எமுதிவருவதாகவும் உறுப்பினர்கள் உரையாற்ற முனையும்போது அவர்கள் உரையாற்றுவதற்கு அவர்களது ஒலிவாங்கியை தடை செய்தாலும் அதை மீறி உறுப்பிர்கள் உரையாற்றுவதை ஊடங்கள் எழுதித்தள்ளுவதாகவும் என அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் ஊடகங்களைச் சாடிக்கொண்டிருந்தார்.
முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் குறித்த விடயம் சபையில் விவாதிக்கப்பட்டிருந்தபோது குறிப்பிட்ட அவர்,
சட்டம் பற்றி ஒன்றும் தெரியாத ஊடகங்கள் சட்டம் சம்பந்தமான விடயங்களில் தங்களுக்கு எல்லாம் தெரியும்போல கண்டதை எழுதித் தொலைப்பதாக கூறினார்.
Post a Comment