Header Ads

test

கள்ளுக்கு வாழ்த்து சொன்ன மோடி!


முன்னைய ஜனாதிபதி மஹிந்த தனது தமிழ் பற்றினை வெளிப்படுத்த தமிழர் தாயகத்தில் தமிழிலில் பேசி அசத்துவது வழமை.அவரது கொச்சையான தமிழ் பேச்சு சிலவேளைகளில் தமிழ் மக்களிற்கு கேலியாகி பதிலுக்கு கைகொட்டி சிரித்ததும் உண்டு.அதனால் கோபமுற்று மோட்டுத்தமிழாகள் என சிங்களத்தில் பதிலுக்கு மஹிந்த திட்டியதும் யாழ்ப்பாணத்தில் அரங்கேறியிருந்தது.


இந்நிலையில் நேற்று இந்திய நோயாளர்காவு வண்டி கையளிப்பு நிகழ்வில் காணொலி மூலம் உரையாற்றிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி தானும் இம்முறை சிங்களம் மற்றும் தமிழில் பேசியிருந்தார்.

தமிழில் சகோதரா சகோதரிகளுக்கு என்பதில் களுக்கு ஆனது கள்ளுக்கு ஆகிப்போக நிகழ்வில் சிரிப்பொலி எழுந்திருந்தது.

நமஸ்கார், ஜபோவன் என ஆரம்பித்து பின்னர் வணக்கதிற்கு வந்திருந்த மோடி லங்கா வாழ் சகோதர சகோதரிகளிற்கு வாழ்த்து தெரிவித்ததுடன் தனது மகிழ்ச்சியை தெரிவித்திருந்தார்.

No comments