Header Ads

test

கொக்குவிலில் வீடு புகுந்து தாக்குதல் - வாகனம் எரிப்பு


யாழ்.கொக்குவில் ஞானபண்டிதா பாடசாலைக்கு அருகில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்து வாள் வெட்டு குழுவினர் வீட்டிலிருந்த பொருட்களை அடித்து சேதப்படுத்தியதுடன், வீட்டின் முன்னால் நின்ற வாகனம் ஒன்றையும் அடித்து நொருக்கி தீயிட்டுக் கொழுத்தி நாசம் செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது. இன்று நண்பகல் 1 மணியளவில் வண்ணார் பண்ணையில் உள்ள கிராமசேவகர் ஒருவருடைய அலுவலகத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்த அதே வாள்வெட்டு குழுவினர், கொக்குவில் ஞானபண்டிதா பாடசாலை அருகில் இருந்த வீடு ஒன்றிற்குள் புகுந்துள்ளனர்.

வீட்டில் கணவன், மனைவி மற்றும் இரு பிள்ளைகளும் வீட்டில் இருந்துள்ளனர். இதன்போது வாள் மற்றும் கோடாரியுடன் சிலர் உட்புகுவதனை அவதானித்த தாயார் இரு சிறுவர்களையும் இழுத்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளார். இதனையடுத்து கணவரும் தப்பியோடினார். வீட்டிற்குள் புகுந்த இளைஞர் கூட்டம் அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கயஸ் வண்டி ஒன்றினை படு மோசமாக தாக்கி சேதப்படுத்தியுள்ளனர்.

அத்தோடு வீட்டின் உடமைகள் மற்றும் வீட்டு கண்ணாடிகள் அனைத்தையும் அடித்து நொருக்கி சேதப்படுத்தியதோடு அச்சுறுத்தி கயஸ் வண்டிக்கும் தீ வைத்து கொழுத்தினர். இவ்வாறு பகல்வேளையில் இவ்வாறு பாரிய அசம்பாவித்த்தில் ஈடுபட்ட கும்பல் மிகச் சாதாரணமாக தப்பிச் சென்ற நிலமையில் அப்பகுதி மட்டுமன்றி யாழ்ப்பாணக் குடாநாடு அச்சத்தில் மூழ்கியுள்ளது.

No comments