Header Ads

test

உயர்தரத் தேர்வுகளில் இராணுவத்தை ஈடுபடுத்த நடவடிக்கை

சிறிலங்காவில் எதிர்வரும் ஓகஸ்ட் 6ஆம் நாள் ஆரம்பமாகவுள்ள கபொத உயர்தரத் தேர்வின் போது, தேர்வு மண்டபத்தில் மாணவர்கள் தொலைபேசி மற்றும் நவீன இலத்திரனியல் தொடர்புக் கருவிகளைப் பயன்படுத்துவதை தடுக்க சிறிலங்கா இராணுவத்தின் உதவி கோரப்பட்டுள்ளது.

தேர்வு மண்டபங்களில் மாணவர்கள் கைத்தொலைபேசிகள் மற்றும் நவீன இலத்திரனியல் கருவிகளின் துணையுடன், மோசடிகளில் ஈடுபடுவதைத் தடுப்பதற்கே சிறிலங்கா இராணுவத்தின் உதவி நாடப்பட்டுள்ளது.

தேர்வு நேரத்தில், தேர்வு மண்டபங்களிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் இத்தகைய தொடர்பாடல் கருவிகளின் செயற்பாட்டை முடக்குவதற்கே சிறிலங்கா இராணுவத்தின் சமிக்ஞைப் பிரிவு உதவவுள்ளது.

தெரிவு செய்யப்பட்ட குறிப்பிட்ட தேர்வு மண்டபங்களில் சிறிலங்கா இராணுவத்தின் உதவியுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

சிறிலங்கா இராணுவத்தின் சமிக்ஞைப் படைப்பிரிவிடம், இலத்திரனியல் கருவிகளை செயலிழக்கச் செய்யும் தொழில்நுட்ப ஆற்றல் இருப்பதாகவும்,  தேர்வுகளின் போது தேவை ஏற்பட்டால் அந்த தொழில்நுட்ப உதவிகளை சிறிலங்கா இராணுவம் வழங்கும் என்றும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

No comments