Header Ads

test

எவ்வகை எதிர்ப்பு வந்தாலும் மரணதண்டனையை அமுல்ப்படுத்துவேன் - மைத்திரி சபதம்


எவ்வித எதிர்ப்புகள் வந்தாலும், போதப்பொருள் கடத்தவர்களுக்கு எதிராக மரணத் தண்டனை விதிக்கப்பட்டே தீரும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

சீனா – இலங்கை நட்புறவு தேசிய சிறுநீரக விசேட வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகள் பொலன்னறுவையில் இன்று (21) காலை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“இலங்கையின் மொத்த சனத்தொகையில்,1.4 வீதமானோர் போதைப்பொருள் பாவனைக்கும், 18 வீதமானோர் சிகரட் பாவனைக்கும், 14 வீதமானோர் மதுவுக்கும் அடிமையாகி உள்ளனர்.


“அத்துடன், கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றிற்கு போதைப் பொருள் கொண்டு செல்லப்பட்டு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது என்று எனக்கு நேற்று தகவல் கிடைத்திருந்தது. ஆகவே, எவ்வித எதிர்ப்புகள் வந்தாலும், இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டே ஆகும்” என்றார்.

No comments